A.K.M. Ramzy / 2021 ஜனவரி 09 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டரா:
மஹாராஷ்டிரா மாநிலம் பண்டரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் தீயில் பரிதாபமாக கருகி இறந்தன.
மஹாராஷ்டிராவின் பண்டராவிலுள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பச்சிளங் குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர்.
மொத்தம் 17 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 7 குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை. இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago