2025 ஜூலை 30, புதன்கிழமை

மருமகளை அடித்தே கொன்ற மாமியார்!

Freelancer   / 2022 மே 25 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து,  35 வயதான மருமகளை அடித்தே கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டம்,  கழுவங்காடு எனும் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2012 இல் திருமணம் முடித்த அந்தப்பெண்ணுக்கு  குழந்தை இல்லை. குழந்தை இல்லாமல் இருப்பதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு,  மனஸ்தாபம் மற்றும் வெடித்துள்ளது. 

இதனால் தம்பதி இருவருமே மனநிம்மதி இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று, கணவன் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றுவிட்டார்.

வீட்டிலிருந்த 75 வயதான மாமியார் மருமகளை அடித்தே கொன்றுள்ளார். இக்கொலைக்கு 15 வயதான பேரனும் உதவிச்செய்துள்ளார்.  அவ்விருவரையும் கைது செய்துள்ள பொலிஸார்,  மாமியாரின் கணவன், இரண்டு நாத்தனார்களுக்கும் வலை வீசியுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .