Freelancer / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும் படி புதுடெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (25) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளையாட்டுத் துறை அமைச்சகம் குறுக்கிட்டு விசாரணை ஆணையம் அமைத்தது.
மேரி கோம் தலைமையிலான ஆணையம் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டது. எனினும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படவேண்டும் என்று கோரி ஏழு மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதனை விசாரணைக்கு எடுத்த போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

12 minute ago
23 minute ago
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
23 minute ago
37 minute ago