Editorial / 2024 ஜூன் 23 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}


17 வயது மாணவர் ஒருவர் தனியார் பாடசாலையில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இவர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர். இந்தநிலையில் திடீரென அந்த மாணவர் மாயமானார். இதுகுறித்து மாணவரின் தந்தை ஆவியூர் பொலிஸில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
அந்த மாணவர் படித்த பாடசாலையில் கணினி அறிவியல் ஆசிரியையாக பணியாற்றியவர் (வயது40). இவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கும், அந்த மாணவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆசிரியைக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த மாணவன் பிளஸ்-2 படித்தபோது, வீட்டு பாடங்களை சரிவர எழுதி வராமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடங்கள் எழுத அந்த ஆசிரியை உதவியுள்ளார். இது அவர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பள்ளி நிர்வாகம், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள மற்றொரு பாடசாலைக்கு ஆசிரியை மாற்றப்பட்டார். ஆனால், அவர் அந்த பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அந்த மாணவனும், ஆசிரியையும் புதுச்சேரிக்கு சென்றனர். அவர்கள் அங்கிருப்பதை அறிந்த பொலிஸார், புதுச்சேரி சென்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 4 நாட்களாக புதுச்சேரி பகுதியில் ஆசிரியையும், மாணவனும் அறை எடுத்து தங்கி இருந்ததும், மாணவனை கல்லூரியில் சேர்க்க முயன்றதும் தெரியவந்தது. ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்தனர்.
28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago