2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாணவிகளுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுமுறை

Ilango Bharathy   / 2023 மார்ச் 08 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் உணர்த்தும் வகையில் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு,  18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 6 மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஆறு மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பில் செல்லும் மாணவர்கள் விடுப்பு முடிந்ததும்,மருத்துவ சான்றிதழ்களை கல்லூரியில் சமர்ப்பித்து கல்வியைத் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே பெண் மாணவர்களுக்கான குறைந்தபட்ச வருகையை 75% லிருந்து 73% ஆக குறைத்துள்ளது.

இந்நிலையில் கேரள அரசின் உயர்கல்வித்துறை, அரசு துறையுடன் இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்புக்கான நாட்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .