Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 12 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கும்பகோணத்தில் புது டெல்லியை சேர்ந்த வங்கி அதிகாரி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அந்த பெண்ணை மாதவிடாய் வலியிலும் கதற வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக புதுடெல்லியிலிருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்தார்.
அப்போது அவர் நள்ளிரவு 11 மணிக்கு மேலானதால் விடுதி அறையில் தங்குவதற்கு திட்டமிட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறினார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை பாதிவழியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
அப்போது குடிபோதையில் இருந்த 4 இளைஞர்கள் ஹோட்டல் அறையில் விடுவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்று கொடூரமான முறையில், மாதவிடாய் வலியில் துடித்த போதும் கூட இரக்கமே இன்றி 2 மணி நேரமாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதனை 4 பேரும் தங்கள் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதோடு, மேலும் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி ஹோட்டலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கும்பகோணம் மேற்கு பொலிஸில் புகார் செய்தனர்.
விசாரணையில் வங்கி அதிகாரியை பலாத்காரம் செய்தது கும்பகோணத்தை சேர்ந்த இளைஞர்கள் தினேஷ், புருஷோத்தமன், வசந்தகுமார், அன்பரசன் ஆகிய 4 பேர் என தெரியவந்தது.
இந்த வழக்கில் தஞ்சை மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகளான, புருஷோத்தமன், வசந்தகுமார், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். மேல் முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி புருஷோத்தமன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜாமீன் தர மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மனுதாரரின் வழக்கறிஞர் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறியதை ஏற்றுக் கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .