2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மானக்கேட்டால் சிசுவை கொன்ற பெண்

Freelancer   / 2023 ஜூலை 30 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கடற்பகுதியில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கை கால்கள் ஒடிந்த நிலையில் வந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜூலிக்கு திருமணமாகி கடந்த 12 வருடங்களுக்கு முன் கணவர் இறந்து போய் உள்ளார். விதவையான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு ஜூலி கர்ப்பம் தரித்துள்ளார். இதுவெளியில் தெரிந்தால் மானக்கேடு என்று எண்ணிய ஜூலி யாருக்கும் தெரியாமல் மறைத்து வாழ்ந்துள்ளார்.

இந் நிலையில் தனக்கு பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்ட உடன் அதன் வாய் மற்றும் மூக்கை கைகளால் அடைத்து மூச்சை அடக்கி கொலை செய்து குழந்தையின் கை கால்களை வெட்டி படுகொலை செய்துவிட்டு வீட்டின் உள்ளேயே குழிதோண்டி புதைத்ததாகவும் இரண்டு நாட்கள் கழித்து உடலை தோண்டி எடுத்து கடலில் விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொலிஸார் குழந்தையை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்து ஜூலியை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X