A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமனிதன் படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி அபிராமி மால் நிறுவனம் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாமனிதன் திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், திரைப்படத்தை வெளியிடவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும். எனவே, தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மாமனிதன்’ திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.
5 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
07 Mar 2026