2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாமாவுக்குப் பரிசு; இளைஞர் கைது

Ilango Bharathy   / 2023 ஜனவரி 10 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 டெல்லியின் கௌதம்புரி பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அண்மையில் காணாமற் போயுள்ளான்.

இதனையடுத்து குறித்த சிறுவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ‘புகார் தாரரின் பக்கத்து வீட்டுக்காரரான நீரஜ் என்பவரும் அன்றைய தினம் இரவு அந்த இடத்தை விட்டுச் சென்றதாகவும், மறுநாள் காலை வரை திரும்பி வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்நபரைக் கண்டுபிடித்து விசாரித்ததில், அவர் குழந்தையைக் கடத்திச் சென்று அலிகாரில் உள்ள அவரது தாய் மாமா சுனித் பாபுவின் இல்லத்தில் தங்கவைத்திருந்தது தெரியவந்துள்ளது.

தனது மாமாவின் மனைவிக்கு நான்கு மகன்கள் பிறந்ததாகவும், ஆனால் அவர்களில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும், அதனால்தான் சிறுவனை மாமாவிடம் ஒப்படைப்பதற்காக அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து குழந்தையை மீட்டபொலிஸார், அந்த நபரையும் அவரது மாமாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .