A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 25 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான தே.மு.தி.க.வுக்கு மட்டும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. பா.ம.க.வுக்கு இணையாக 23 இடங்களை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பிடிவாதமாக இருந்ததே இதற்கு காரணமாக அமைந்து இருந்தது.
அதேநேரத்தில் அ.தி.மு.க. சார்பில் 23 இடங்கள் ஒதுக்க முடியாது என்றும், 15 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்த பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க. தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்தது. 15 முதல் 20 இடங்களுக்குள் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தது.
இந்தநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் பார்த்த சாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க.வுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. பெருவாரியான இடங்களை அ.தி.மு.க. தலைமையிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக உள்ளது.இதுதொடர்பாக நாளைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago