2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மீண்டும் ஊரடங்கு?

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலமாகக் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இதனால் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது  மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500  ரூபாய் அபராதமாக விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் தீவிரமடைந்து வரும் கொரோனாப் பரவலால் காரணமாக ஊரடங்கு அமுல் படுத்தப்படும் வாய்ப்பு  இருப்பதாகவும் கூறப்பட்டது.

 இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்” தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த வாய்ப்பு இல்லை.  அத்துடன் `தமிழகத்தில் கொரோனாப்  பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறன.

ஆகவே மக்கள் அலட்சியமாக இருக்காமல், தமிழக அரசின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .