2025 மே 09, வெள்ளிக்கிழமை

மீண்டும் நடை பயணம்

Mithuna   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு-காஷ்மீர் வரை இந்தியாவின் தெற்கு பகுதியில் இருந்து வடக்குப் பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டார். இதற்கு பாரத் ஜோடோ யாத்ர எனப் பெயரிடப்பட்டிருந்து.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு மக்களில் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் பழுது பார்த்தல், டிராக்டர் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு மக்களோடு மக்களாக இணைந்தார். எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த போதிலும், இவரது நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை அளித்தது.

இந் நிலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி "பாரத் நயா யாத்ரா" என்ற பெயரில் நடைபயணத்தை வருகிற ஜனவரி 14-ந் திகதி முதல் மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 14 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X