A.K.M. Ramzy / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவெடுத்து ள்ளார். இதுகுறித்தஅறிவிப்பை பொங்கல் பண்டிகையன்று வெளியிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள எஸ்ஏசி, மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சாலி கிராமத்தில் உள்ள எஸ்ஏசியின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது. இதில் மன்றத்தின் அதிருப்தி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ள்ளனர். ஆலோசனைக்கு பிறகு உடனடியாக 20 மாவட்ட பொறுப்பாளர்களையும் எஸ்ஏசி நியமித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்ஏசியிடம் கேட்டபோது, ‘‘நிறைய திட்டமிடல்கள் நடந்து வருகின்றன. இது மார்கழி மாதம். இப்போது அதுபற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். தை பிறக்கட்டும். 14ஆம் திகதி அனைவரையும் அழைத்து நல்ல சேதி சொல்கிறேன்’’ என்றார்.
விஜய் தரப்பில் கேட்டபோது, ‘‘எஸ்ஏசி கட்சிக்கு எந்த ஆதரவும் இல்லை. விஜயை பொருத்தவரை, தந்தையின் கட்சிக்கு ஆதரவு இல்லை என்ற அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்’’ என்றனர்.
கட்சி பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் சில எஸ்ஏசி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ‘எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’ அல்லது‘அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்’என்பது கட்சிப் பெயராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago