2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முகூர்த்த நேரத்தில் வந்த காதலன்

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்திற்கு வந்த காதலனை பார்த்து மனம் மாறிய மணப்பெண், தாலி கட்டி கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

தொட்டபல்லாபுரத்தை சேர்ந்த இளைஞனுக்கும்  இளம் பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடைபெறுவதாக திகதி குறிக்கப்பட்டிருந்தது. 

இரு வீட்டார் சார்பிலும் ஏராளமான உறவினர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தாலி  கட்டும் முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணமகன் தாலி கட்ட வந்த போது, மணப்பெண் தாலி கட்டிக்கொள்ள மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இது குறித்து விளக்கமளித்த மணப்பெண் கடந்த சில ஆண்டுகளாக தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், தங்களது காதலை வீட்டில் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும்  கூறியிருக்கிறார்.

மேலும் தான் காதலிக்கும் நபர் இந்த திருமணத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மணப்பெண் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் என்ன செய்தென்று தெரியாமல் திகைத்துப் பேய் நின்றுள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மணப்பெண் மேஜர் என்பதால் அவருடைய விருப்பத்திற்கு மாறாக இந்த திருமணத்தை நடத்தி வைக்க முடியாது எனக் கூறியுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X