2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

முதலமைச்சர் நிதியத்துக்கு யாசகர் நிதியுதவி

Ilango Bharathy   / 2021 ஜூலை 07 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்குப் பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்த பூல் பாண்டியன் (70) என்ற யாசகர் தான் யாசகம் பெற்ற பணத்தில் 10 ஆயிரம் ரூபாவைக் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் தான் யாசகம் பெற்ற பணத்தில் அப்பகுதியிலுள்ள  பாடசாலைகளுக்கு சிசிடிவி கெமரா, குடிநீா் சுத்திகரிக்கும் இயந்திரம், மேசைகள், கதிரைகள் எனப் பல்வேறு பொருட்களை வழங்கி உதவி செய்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X