2026 மார்ச் 07, சனிக்கிழமை

‘முதலமைச்சர் பழனிசாமி பெயரில் வீடு, நிலம் சொந்தமாக இல்லை’

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 16 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எடப்பாடி ;

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சொந்த வீடு, நிலம் கிடையாது என்று வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த வருமான வரி விவரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதில் அவருக்கு ரூ.47 இலட்சத்து 64 ஆயிரத்து 542 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன.

அவரது பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், குடும்ப சொத்தாக 22 ஏக்கர் நிலம், 6 ஆயிரத்து 700 சதுரடி வீட்டு மனை உள்ளது என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு, நிலம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மனைவி ராதா பெயரில், ரூ.1 கோடியே 4 இலட்சத்து 11 ஆயிரத்து 631 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.2 கோடியே 89 இலட்சத்து 18 ஆயிரத்து 981 மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளன. இவரது பெயரில் ரூ.14  இலட்சத்து 75 ஆயிரத்து 453 மதிப்பில் வீட்டுக்கடனும் உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .