Ilango Bharathy / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா முழுவதும் வெளிவரக் கூடிய பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அண்மையில் ‘இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்கள்‘ என்ற தலைப்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியப் பிரதமர் மோடியும், இரண்டாமிடத்தில் உட்துறை அமைச்சர் அமித்ஷாவும், மூன்றாம் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு 13ஆவது இடத்தில் இருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யா நாத் இவ்வாண்டு 6ஆவது இடத்துக்கு முன்னேறி செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சாதனை புரிந்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இப்பட்டியலில் 23ஆவது இடத்தைப் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிகப்பெரும் அளவில் தொடர் வெற்றிகளை ஈட்டியதன் மூலம் அவர் இந்த இடத்தை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
10 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
19 minute ago
2 hours ago