2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முதல் மாநிலமாக வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா

Freelancer   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை அமைக்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

 புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்த, இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது.

கேரளாவைச் சேர்ந்த எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த சட்டத்திற்கு கடுமையாக எதிர்த்தது. கேரள சட்டசபையில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், திடீர் திருப்பமாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை அமைக்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு, தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவற்றில் கேரளா ஒன்றாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .