Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவருக்கு, அவரது நண்பர் மூலமாக அன்னம்மா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். அன்னம்மாவுக்கு 40 வயதாகிறது. தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி அரசு ஊழியரிடம் கண்ணீர் சிந்தியுள்ளார். பிறகு 5,000 ரூபாய் உதவி வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மனமிறங்கிய அந்த அரசு ஊழியரும் அந்த பெண்ணுக்கு 5,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார்
இதனிடையே, சினேகா என்ற தன்னுடைய தோழியை, அரசு ஊழியருக்கு அன்னம்மா அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு பிறகு, கடந்த ஜூன் மாதம், அன்னம்மாவிடம் இருந்து அரசு ஊழியரின் ஆபாச வீடியோ, போட்டோக்களை சினேகா பெற்றுக் கொண்டுள்ளார். பிறகு, அரசு ஊழியரை பணம் கேட்டு மிரட்ட துவங்கி உள்ளார். "பணம் கொடுக்காவிட்டால், உங்க வீட்டுக்கு இந்த ஆபாச வீடியோவை அனுப்பிவிடுவேன்" என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அவமானத்திற்குப் பயந்துபோன முதியவர், சினேகா சொன்னதுபோலவே, 2 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 82 இலட்ச ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
47 minute ago
2 hours ago