2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

முன்னாள் முதலமைச்சர் விடுதலையாகலாம் ?

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 24 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி :

ஊழல் வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள, ஹரியானா முன்னாள் முதலமைச்சர், ஓம் பிரகாஷ் சௌதாலா, (86) விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.

ஹரியானாவில், முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பாரதிய ஜனதா அரசாங்கம் அமைந்துள்ளது. கடந்த, 2000ஆம் ஆண்டில், மாநிலத்தில்  ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. இதில், ஐ.என்.எல்.டி., எனப்படும் இந்திய தேசிய லோக் தளத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான, ஓம் பிரகாஷ் சௌதாலா, அவருடைய மகன், அஜய் சௌதாலா உட்பட, 56 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இதில், ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொரோனா பரவல் காரணமாக, சிறைகளில் நெரிசலை குறைக்க, டெல்லி அரசாங்கம்  புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏழு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, ஐந்து மாதங்களே பாக்கி உள்ளவர்கள், விடுவிக்கப்பட உள்ளனர்.

கடந்த, 2013ஆம் ஆண்டு  சிறையில் அடைக்கப்பட்ட சௌதாலா, கடந்தாண்டு, மார்ச்சில், அவசர பரோலில் விடுவிக்கப்பட்டார். கொரோனா பரவல் காலத்தில், அது இரு முறை நீடிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மேலும், மூன்று மாத தண்டனையே பாக்கி உள்ளது.

தற்போது டெல்லி அரசாங்கம்  புதிய உத்தரவால், அவர் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம். உரிய நீதிமன்றத்தில் அவர் ஆஜரான பிறகு, விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X