2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

முருகனுக்கு அமைச்சர் பதவி?

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 07 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இருக்குமா? என்ற ரீதியில் நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்தன. அந்த வகையில், எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி உறுதியாக கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 இதில்,  தமிழகத்தில்  பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் எல்.முருகன் மற்றும் எம்பி ஓபி ரவீந்திரநாத்குமார் ஆகியோரின் பெயர் வெகுசாகப் பேசப்படுகின்றன.

அதிலும்,எல்.முருகனுக்கு நிறைய  சந்தர்ப்பங்கள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர் பதவியை பெற்றே தீருவது என்று டெல்லியில் முருகன் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.  

இந்த ஒரு வருடமாகவே தமிழகத்தில் முருகனின் செயல்பாடுகள் பாஜகவுக்கு திருப்தியை தந்து வரும் நிலையில், முருகனுக்கு அமைச்சர் பதவிகிடைக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X