2026 மார்ச் 07, சனிக்கிழமை

மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், அசாமில் பாஜகவும், கேரளாவில் இடதுசாரிகளும் ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி, சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் திமுகவும், புதுச்சேரியில் பாஜகவும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்து கணிப்பு கூறுகிறது.

அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் பணியிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து 5 மாநில வாக்காளர்களின் மனநிலையை கணித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும். அக் கட்சிக்கு மொத்தம் உள்ள 294இல் 148 முதல் 164 இடங்கள் கிடைக்கும். இங்கு 92 முதல் 108 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.இத்தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து போட்டியிட்டாலும் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும். இக்கூட்டணிக்கு 31 முதல் 39 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .