Freelancer / 2024 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது 80ஆவது வயதில் காலமானார்.
மேற்கு வங்கத்தின் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியின் கடைசி முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா, 2000-2011 வரை மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருந்தார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொல்கத்தாவில் இன்று காலை 8.20 மணிக்கு காலமானார்.
1977ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களில் இடதுசாரிகள் கூட்டணிதான் தொடர்ச்சியாக வென்று ஆட்சி செய்து வந்தனர்.
1977ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராக முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு ஆட்சி அமைத்தார். ஜோதிபாசுவுக்குப் பின்னர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் பட்டாச்சார்யா முதல்வர் பதவியை அலங்கரித்தார்.
2011ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி ஆட்சியை அமைத்து வருகிறார்.S
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago