A.K.M. Ramzy / 2021 மார்ச் 28 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
எல்லோரும் எங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்கிற சித்தாந்தம் உடையவர்கள் ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி வகையினர். அனைவரும் சமம் என்கிற சித்தாந்தம் கொண்டவர்கள் நாங்கள். ஒரு மாநில முதல்வரைத் தங்கள் காலடியில் வீழ்த்தி ஆட்சி செய்யும் மோடி, அமித் ஷாவின் நடைமுறையை வெறுக்கிறேன் என ராகுல் காந்தி உரையாற்றினார்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பேசியதாவது:
“நான் எளிமையாக இந்தத் தேர்தல் எதைப் பற்றியது என்பதைச் சொல்ல விரும்புகிறேன். இதில் என்னுடைய சொந்த அனுபவத்தைச் சேர்த்து இங்கு சொல்ல விரும்புகிறேன். அதன் பிறகு உங்களுக்கே புரியும். பாஜக, அதிமுகவை ஏன் எதிர்க்கிறேன், என் முழு வலிமையையும் அதற்காகச் செலவிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியவரும்.
நான் அமேதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது ஒரு இளம் காங்கிரஸ் நிர்வாகி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவுக்குச் சென்றார். அவர் பாஜகவில் சேர்ந்தவுடன் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கு இணையாக அவரைச் சேர்த்துக்கொண்டார்கள்.
இந்தத் தலைவர்கள் அமித் ஷாவைச் சந்திக்கும் ஒரு புகைப்படத்தை நான் பார்த்தேன். அவர் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவர். அவர் அமித் ஷாவைச் சந்திக்கும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன்.
அந்தப் புகைப்படத்தில் அமித் ஷா சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் முன் கூனிக்குறுகி கை கட்டி நின்றிருந்தார். அமித் ஷாவின் காலைத் தொட்டு கும்பிட்டபடி இருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் இன்னொரு தலைவர் முன் கையெடுத்துக் கும்பிட்டு கூனிக்குறுகி நிற்பதையும், காலில் விழுவதையும் ஒரு அவமானகரமான நிகழ்வாகத்தான் நான் பார்த்தேன் என்றார்.
45 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago