Editorial / 2025 ஜூலை 09 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகில், சங்காரெட்டி மாவட்டம் பாஷமைலாரம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக சிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஜூன் 30-ம் திகதி ரியாக்டர் டேங்க் திடீரென வெடித்ததில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெலங்கானா அரசு தலா ரூ.1 கோடியும், சிகாச்சி நிறுவனம் தலா ரூ.1 கோடியும் நிவாரணமாக அறிவித்தன. மேலும் காயமடைந்தவர்களுக்கும் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் பலரது உடல்கள் உருக்குலைந்து போனதால் டிஎன்ஏ பரிசோதனையில் அடையாளம் கண்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதால், இதன் இடிபாடுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் இடிபாடுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டாலும் இன்னும் 8 பேரை காணவில்லை. இவர்கள் என்னவானார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025