A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
ரஜினி சொல்வதே கட்சியின் பெயர். புதிய கட்சியின் பெயர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பாரென ரஜினி கட்சியின் மேற்பார்வை யாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினி கட்சியின் தலைமை நிர்வாகி அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோர் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களு டன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் கூறியது:
கட்சியின் அடிப்படை கட்டமைப்புகள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசித்து வருகிறோம். ரஜினி சொல்வதே கட்சியின் பெயர். கட்சியின் பெயர், சின்னம் போன்றவை குறித்தெல்லாம் ரஜினியின் மூலம் அறிவிப்பு வந்தாலே உண்மை என்றார்.
ரஜினியின் புதிய கட்சிப் பெயர், மக்கள் சேவைக் கட்சி என்றும், சின்னம் ஆட்டோ என்றும் புதன்கிழமை செய்திகள் பரவின. அதைத் தொடர்ந்து மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் அந்தப் பெயருக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
5 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
07 Mar 2026