2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரஜினியின் அதிரடிச் சந்திப்பு?

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 12 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று  நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவில்    சிகிச்சை பெற்ற பின்னர், சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்தார்.

இந்த நிலையில் அவர் இன்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.   இன்றைய சந்திப்பு  ஏன் என்பது தொடர்பில் இன்னும் தெரியவில்லை.

மக்கள் மன்றத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறாரா இல்லை மக்கள் மன்றத்தைக் கலைப்பதற்கு திட்டமிட்டுள்ளாரா என தெரியவில்லை. இந்த சந்திப்பு நிகழ்ச்சி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதனால், காலை முதலே ரசிகர்கள் கோடம்பாக்கத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மன்ற நிர்வாகிகளை மட்டுமே சந்திப்பார் என்றாலும் மண்டபத்துக்குள் செல்லும் முன்னர் அங்கு குவிந்திருக்கும் ரசிகர்களை பார்த்து கையசைப்பார் என தெரிகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X