2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ரஜினியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐதராபாத்,

ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனையின் புதிய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.

 எப்போது ரஜினி சென்னை திரும்புவார் என்ற தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த அனுமதிக்கப்ப ட்டுள்ளார் என தகவல் வெளியானது.  இது தொடர்பாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரத்த அழுத்த அளவில் மாறுபாடு மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை. அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன என்று தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடிகர் ரஜினியின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ரத்த அழுத்தத்தில் நேற்றை விட முன்னேற்றம் இருந்தாலும் இரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே உள்ளது. ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 இரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை."  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .