2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ரயில்வே பாலம் இடிந்ததில் 17 பேர் பலி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிசோரம் மாநிலத்தில் கட்டுமானப் பணியின் போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 30 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மிசோரம் மாநிலத்தின் சாய்ரங் பகுதியில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தலைநகர் ஐய்ஸ்வாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன

திடீரென ரயில்வே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.  இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X