A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை;
ராமர் கோவில் கட்ட நிதி திரட்ட முயன்ற, வேலூர் இப்ராஹிம் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்டவும், மத்திய பாஜக அரசை ஆதரித்து தொடர்ந்து பேசி வருபவரும், ஏகத்துவ பிரசார ஜமாஅத் தலைவருமான வேலூர் இப்ராஹிம் நேற்று கோவைக்கு வந்தார்.
தனியார் ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனியாக எங்கும் செல்ல வேண்டாம் , நிதி வசூல், மேட்டுப்பாளையத்துக்குசெல்ல வேண்டாம் என அவரை பொலிஸார் அறிவுறுத்தினர்.
ஆனால், அதை மீறி வெளியே செல்ல அவர் முயன்றார். இதையடுத்து செட்டிபாளையம் பொலிஸார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் இப்ராஹிம்மை நேற்று கைது செய்தனர். பின்னர், பிணையில் அவரை விடுவித்தனர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட போது, வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ கோவையில் ராமஜென்ம பூமியின் கோவில் வசூலுக்காக, மத நல்லிணக்க அடிப்படையில் நான் வந்தேன். பொலிஸார் என்னை செல்ல விடாமல் தடுக்கின்றனர்.
காரணம் கேட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுக்க இதையே கூறுகின்றனர். மத நல்லிணக்கத்துக்கு பெரிய சவாலாக தமிழகம் இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், மத நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்று பாடுபட்டு கொண்டிருக்கும் போது, இங்கு அரசியல் வாக்கு வங்கிக்காக சிலர் அமைப்புகள் தொடர்ந்து எனக்கு அச்சறுத்தல் விடுகின்றனர்.
மிகப்பெரிய ஆபத்து. நிச்சயம் மதநல்லிணக்க பூமியாக தமிழகம் தொடர்வதற்கு நான் தொடர்ந்து பணியாற்றுவேன்,’’ என்றார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago