2026 மார்ச் 07, சனிக்கிழமை

ராமர் கோவில் கட்டுமானத்துக்கு நிதி தர மறுத்ததால் இடைநிறுத்தம்!

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 09 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியா,

உத்தரபிரதேச மாநிலம் ஜெகதீஷ்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர், யஷ்வந்த் பிரதாப்சிங்.

இவர், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கு ரூ.ஆயிரம் நன்கொடை வழங்குமாறு தன்னை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் தன்னை பள்ளி நிர்வாகிகள் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட்டு அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை  நாடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ராமர் கோவிலுக்காக தனக்கு நன்கொடை ரசீது புத்தகம் வழங்கப்பட்டது. அதன் மூலம் ரூ.80 ஆயிரம் வசூலித்து கொடுத்துவிட்டதாக பிரதாப்சிங் கூறுகிறார்.

ஆனால், பிரதாப்சிங்கின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பள்ளி நிர்வாகிகள், அவர் தானே விரும்பித்தான் 3 நன்கொடை ரசீது புத்தகங்களை பெற்றதாகவும், ஆனால் வசூலித்த தொகையை வழங்கவில்லை என்றும், அவர் தானாகவே ராஜினாமா செய்துவிட்டார் எனவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .