2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ராமேஸ்வரம் – தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல்

Freelancer   / 2022 ஜூலை 15 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

பாம்பன் கால்வாயைத் தூர்வாரும் பணி தொடர்பாக பாம்பனில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாகர் மாலா திட்டத்தின் கீழ் பாம்பன் கால்வாயைத் தூர்வாருவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

பாம்பன் கால்வாயை 10 மீட்டர் வரையிலும் தூர்வாரி ஆழப்படுத்தினால் இலங்கையைச் சுற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் பாம்பனைக் கடந்து செல்வதுடன் பயண தூரமும் குறையும்.

மேலும், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போக்குவரத்தை விரிவுபடுத்துதல், ராமேஸ்வரம் துறைமுகத்துக்கான நிர்வாக அலுவலகம் அமைப்பது மற்றும்ராமேஸ்வரத்திலிருந்து மீண்டும் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வையும் மேற்கொண்டேன் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X