Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஜூலை 22 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூக்கில் தொங்குவது போல் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி, சிறுவன் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் தனது நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முடிவு செய்தான். தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வது போல் தான் நடிக்க, தனது நண்பர்கள் அதனை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.
இதனை அடுத்து மரத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்குவது போல் அந்த சிறுவன் நடித்த போது சக நண்பர்கள் அதனை வீடியோ எடுத்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக சிறுவனின் கழுத்து இறுக தொடங்கியபோது அலறி துடித்துள்ளான். ஆனால் நண்பர்களோ தத்ரூபமாக நடிப்பதாக நினைத்து தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் பரிசோதித்து சிறுவன் இறந்து விட்டதாக கூறினர். இதனால் அந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் சிறுவன் பெயர் கரண் என்றும், வயது 11 என்றும், அதே பகுதியில் உள்ள பாடசாலையில் ஏழாம் வகுப்பு படித்து வந்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
58 minute ago
2 hours ago