Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லி மெட்ரோ ரெயிலில், அண்மையில் மஞ்சள் துவாயுடனும் நபர் ஒருவர் நடமாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவில் வெள்ளை பனியன் அணிந்திருந்த அந்நபர் இடுப்பில் மஞ்சள் துவாய் ஒன்றை கட்டிக்கொண்டு வீட்டில் இருப்பது போன்று சாதாரணமாக நடமாடியுள்ளார்.
இந்நிலையில் குறித்த வீடியோவினைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நபர் "என் வீட்டில் தண்ணீர் காலி, இன்று அலுவலகத்தில் குளிக்கவுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இவ் வீடியோவுக்குப் பின்னர் அப்பக்கத்தில் `behind the scene ~என மற்றொரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அதில் அந்த நபர் துவாயைக் கழட்டுவதும் உள்ளே அவர் காற்சட்டை அணிந்திருப்பதும் தெரிகின்றது.
இந்நிலையில் ” இவ் வீடியோவை அவர் திட்டமிட்டே லைக்குகளுக்காக எடுத்துள்ளார் எனப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், பொது இடங்களில் இந்த கோமாளித்தனங்களை நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன?” என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .