A.K.M. Ramzy / 2021 ஜனவரி 07 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூர்:
லவ் ஜிகாத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பின்வாங்க மாட்டோம் என கர்நாடக ஜவுளி மற்றும் சிறுபான்மை வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூர், விகாஸ்செளதாவில் புதன்கிழமை தனது துறை தொடர்பான புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:
லவ் ஜிகாத் என்ற பெயரில் பல பெண்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதற்கு மக்களி டையே எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, லவ் ஜிகாத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
லவ் ஜிகாத் சட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக சட்டத் துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சட்டத்தை வடிவமைத்த பிறகு, அதனை முழுமையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட சமுதாய மக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் சட்ட வடிவத்தை தாக்கல் செய்து, அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அமுல்படுத்தப்படும். லவ் ஜிகாத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றார்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago