2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

லிப்லாக் செய்த கணவனின் நாக்கை கடித்த மனைவி

Janu   / 2023 ஜூலை 24 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வதை பாலியல் குற்றமாக (திருமண வன்கலவி  - Marital Rape) அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஆந்திராவில்  பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணவனை மனைவி துண்டித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த தாரா சந்த், புஷ்பாவதி தம்பதி அடிக்கடி சிறு பிரச்சினைகளுக்காக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது தனது மனைவியை சமாதானம் செய்வதற்காக தாரா சந்த் தனது மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து லிப்லாக் செய்திருக்கிறார்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத மனைவி பத்மாவதி கோபத்தில் அவருடைய நாக்கை பலமாக கடித்து வைத்துள்ளார். நாக்கில் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடிதுடித்த தாரா சந்தை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரித்தபோது தனக்கு விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததால் நாக்கை கடித்து வைத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X