Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஏப்ரல் 21 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) உரிமை பாலியல் குற்றங்கள் மற்றும் விபசாரங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று மத்தியப் பிரதேச உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
25 வயது பெண் ஒருவரின் பாலியல் பலாத்புகார் தொடர்பான மனு ஒன்றின் விசாரணையின் போது மத்திய பிரதேச உச்சநீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சின் நீதிபதி சுபோத் அபியங்கர் கூறியதாவது:-
சமீபத்திய காலங்களில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொள்ளும்போது, லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் தடை செய்யலாம் என்பதை இந்த நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த உறவு முறை இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை மூழ்கடித்து, காம நடத்தையை ஊக்குவிக்கிறது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
புகார் அளித்த பெண் இரண்டு முறைக்கு மேல் கர்ப்பமாகிவிட்டதாகவும், விண்ணப்பதாரரின் அழுத்தத்தின் கீழ் கருவைக் கலைத்ததாகவும் ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
அவர்களின் உறவு முறிந்தபோது, அந்தப் பெண் வேறு ஒருவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், ஆனால் பெண்ணுடன் வாழந்தவர் அந்த பெண்ணை அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago