2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வக்பு திருத்த சட்டம் அமுலானது

Freelancer   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வக்பு திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து, வக்பு திருத்த சட்டம் அமுலுக்கு வந்தது.

 

வக்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. 

ஜெகதாம்பிகா பால் தலைமையின குழு நீண்ட ஆய்வுக்குப் பிறகு தனது பரிந்துரையை வழங்கியது.

இதன் அடிப்படையில் வக்பு திருத்த மசோதா கடந்த 2ஆம் திகதி மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தாங்கள் கோரிய திருத்தங்கள் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

எனினும், சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு நள்ளிரவில் மசோதா நிறைவேறியது. இதையடுத்து 3ஆம் திகதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 17 மணி நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இந்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, மக்களவையில் ஆதரவாக 288 உறுப்பினர்களும் எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இதுபோல மாநிலங்களவையில் ஆதரவாக 128 பேரும் எதிராக 95 பேரும் வாக்களித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .