2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானாநென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. வீடொன்றை வாடகை எடுத்து அதில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அறைக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முயன்றுள்ளார்.

அவரால் தனை திறக்க முடியவில்லை. பின்னர் லாஉடைக்க முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை. இதையடுத்து முகமூடி கொள்ளையன் வங்கி முழுவதும் நகை பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்த்த போது எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த முகமூடி கொள்ளையன் சிரமப்பட்டு கதவை உடைத்து வந்தும் எதுவுமே கிடைக்கவில்லையே என வருத்தம் அடைந்து வங்கியில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து ஸ்கெட்ச் பேனா மூலம் இந்த வங்கியில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என்னை தேட வேண்டாம் என்னுடைய கைரேகை எதுவும் இங்கு பதிவு ஆகி இருக்காது. இது ஒரு நல்ல வங்கி என அதிகாரிகளுக்கு தெலுங்கில் பாராட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X