2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’வட்ஸ் அப்பில் கஞ்சா`: அதிர்ச்சியில் பொலிஸார்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை சூளைமேட்டைச் சேர்நத இளைஞர் ஒருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொதிகளை விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு ரகசியத் தகவலொன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் குறித்த பகுதியில் பொலிஸார்  ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் கஞ்சாப் பொதிகளை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஒரு  பொதி 50 ரூபாய் என்று மாறு வேடத்தில் நின்ற பொலிஸாருக்கும் விலை கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்து சுமார் 3.5 கிலோகிராம்  நிறைகொண்ட கஞ்சா பொதிகளையும், அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையில் ”அவரது பெயர் யாசர் என்பதும், வட்ஸ் அப்பின் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு கஞ்சா விற்பனையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .