2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வயிற்றில் கட்டியாக சேர்ந்த 2 கிலோ கிராம் முடி

Mithuna   / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் பெரிய கட்டி போன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமிக்கு எண்டாஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமியின் வயிற்றில் தலை முடி கட்டி போன்று சேர்ந்திருப்பது தெரியவந்தது.

அவற்றை அகற்ற சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியின் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மருத்துவர் ஷாஜஹான் தலைமையிலான மருத்துவர்கள் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமியின் வயிற்றில் கத்தையாக சேர்ந்திருந்த முடி அகற்றப்பட்டது. அந்த முடி கத்தை 2 கிலோ கிராம் எடை இருந்துள்ளது. அந்த சிறுமிக்கு தலைமுடியை கடித்து சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. அவள் சிறு வயது முதலே இந்த பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.

அவள் கடித்து சாப்பிட்ட தலைமுடி, வயிற்றில் சேர்ந்து வந்தபடி இருந்திருக்கிறது. அதிக அளவில் முடி தேங்கி விட்ட பிறகே சிறுமிக்கு வயிற்றுவலி வந்திருக்கிறது. தலைமுடியை உண்ணும் பழக்கம் கவலை மற்றும் மனஅழுத்தம் உள்ள குழந்தைகளிடம் அரிதாக காணப்படுவதாகவும், வயிற்றில் உள்ள உணவுடன் முடி சேர்ந்து பெரிய கட்டியை உருவாக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X