A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆக்ரா,
வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்த சூழலில் ஆக்ரா முஸ்லிம் சமூக பிரிவினர் வரதட்சணை வாங்குவதில்லை என உறுதிமொழி எடுத்து உள்ளனர்.
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்திய சூழலில் ஆயிஷா என்ற முஸ்லிம் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் முஸ்லிம் சமூக பிரிவினர் ஆயிஷாவுக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். இதன்பின் ஜமித் உல் குரேஷ் என்ற அமைப்பின் தலைவர் முஹமது ஷெரீப் காலே கூறும்பொழுது,
வரதட்சணை கொடுக்கவில்லை என்பதற்காக, கணவர் மற்றும் அவரது உறவினரால் ஆயிஷா கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார். இதுபோன்ற நபர்கள் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
அனைத்து சமூகத்தினரும் வரதட்சணைக்கு மறுப்பு தெரிவிக்கும் முடிவை மேற்கொள்ள வேண்டும் என கூறிய அவர், இஸ்லாமில் வரதட்சணை தடை செய்யப் பட்டுள்ளது. வரதட்சணையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago