A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29ஆம் திகதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில்,நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
பின்னர் பாராளுமன்றம் தொடங்கியதைத் தொடர்ந்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:
'உலகம் முழுவதும் கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத சூழ்நிலையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன.
கொரோனா பரவல் ஏற்பட்ட மோசமான காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். கடந்த ஆண்டு நான் தாக்கல் செய்தபோது இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago