A.K.M. Ramzy / 2021 நவம்பர் 15 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

மும்பை,
பிரபல வரலாற்று ஆசிரியரும், மராட்டிய எழுத்தாளருமான பத்ம விபூஷன் விருது பெற்ற பாபாசாகேப் புரந்தரே 99ஆவது வயதில் இன்று காலமானார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது தொடர்பான உடல் நலக்குறைவு காரணமாக புனேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல், மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து, இன்று அதிகாலை 5 மணியளவில் பாபாசாகேப் புரந்தரே காலமானார். அவரது இறுதி சடங்குகள் வைகுண்ட சுடுகாட்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு, வரலாறு மற்றும் கலாசார உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. வரும் தலைமுறையினர் சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் மேலும் இணைந்திருப்பதற்கு அவருக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுகூரப்படும்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026