2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வளைகுடாவுக்கு கடத்தப்பட இருந்த சிறுமிகள் பொலிஸாரால் மீட்பு

Freelancer   / 2024 மார்ச் 16 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரில் சிறுவர் இல்லத்திலிருந்து, வளைகுடா நாட்டுக்கு கடத்தப்பட இருந்த 20 சிறுமிகளை பொலிஸார் அதிரடியாக மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் சம்பிகேஹள்ளியில் செயற்பட்டு வரும் சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கங்கூனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரியங்க் கங்கூன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிறுவர் இல்லத்தின் உரிமையாளர் சமீர், உதவியாளர் சல்மா ஆகிய இருவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த கும்பல் ஒன்று, அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு சோதனை நடத்திய போது, இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

அந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், 'நாங்கள் இங்கு சேர்ந்த ஆரம்பத்தில் பாடசாலைக்கு தொடர்ந்து அனுப்பினாலும், சில நாட்களின் பின்னர் பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டு, இருட்டு அறையில் அடைத்து வைத்தனர். இப்போது எங்களை வளைகுடா நாட்டுக்குக் கடத்த முயற்சி செய்கின்றனர்" என கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், சிறுவர் இல்லத்தின் உரிமையாளர் சமீர், உதவியாளர் சல்மா ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X