2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வழி தெரியாமல் தவித்த நபர் அடித்துக் கொலை

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வழி தெரியாமல் தவித்து நின்ற நபரை, திருடன் என நினைத்து இளைஞர்கள் சிலர் தாக்கியதில் அவர் உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் பகுதியில் பிரபல நிறுவனமொன்றின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் குறித்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ‘காசேட்ரா மோகன்‘ என்பவர், கடந்த 12 ஆம் திகதி இரவு தனது குடியிருப்பில் இருந்து வெளியே உணவருந்தச் சென்றுள்ளார்.

இந்நிலையில் உணவருந்திவிட்டு மீண்டும் தனது குடியிருப்பிற்கு செல்ல வழிதெரியாமால் திகைத்து நின்றுள்ளார்.

அவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருப்பதைக் கவனித்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அவர் திருட வந்துள்ளார்  என எண்ணி அவரைப் பிடித்து கட்டையாலும், கையாளும் கண்மூடித்தனமாக தாக்கி வீதி ஓரத்தில் உள்ள கம்பத்தில் கட்டிப் போட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து அப்பகுதி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை  பலனின்றி நேற்று முன்தினம் (14 ) உயிரிழந்தார்.

 இச் சம்பவத்தை கொலைவழக்காகப்  பதிவு செய்த பொலிஸார்  தாக்குதல் நடத்திய 6 பேரைக்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .