2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

Mithuna   / 2024 பெப்ரவரி 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியானா மாநிலம் குருகிராமில் நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது,

“மோட்டார் வாகனச் சட்டம் 194இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

மேலும், இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும்.

ஏற்கனவே, குருகிராம் போக்குவரத்து பொலிஸார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X