2024 மே 02, வியாழக்கிழமை

வாரணாசியில் களமிறங்கும் பிரதமர் மோடி

Mayu   / 2024 மார்ச் 04 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  இந்தியப் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

டெல்லியில் கடந்த 2 நாட்களாக பாஜக தலைவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். கடந்த 29ஆம் திகதி டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்துள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக முதலமைச்சர்கள்,  முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே சனிக்கிழமை (02) பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 47 இளைஞர்களுக்கும் 28 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசியில் தொகுதியில்,  பிரதமர் மோடி மூன்றாவது முறையாக களமிறங்கவுள்ளார். கடந்த 2 முறையும் இந்த தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் தற்போது வாரணாசியில் தொகுதியில் போட்டியிடவள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .