A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடலூர்
தமிழக அரசியலில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு முறையான வாரிசு இல்லாததால், அவர்கள் தங்கள் அரசியல் வாரிசை அடையாளம் காட்டாமலேயே காலத்தைக் கடந்து சென்று விட்டனர்.
மேற்கண்ட நான்கு தலைவர்களுடன் அரசியல் செய்த கருணாநிதி, தான் வாழ்ந்த காலத்தில் வாரிசுகளை உருவாக்கி, ஜனநாயக முறைப்படி அவர்களை கட்சிப் பதவிகளில் அமர்த்தினார்.
கருணாநிதி காலத்திலேயே கட்சியின் பொருளாளர் பொறுப்பை எட்டிப் பிடித்தார் ஸ்டாலின். கருணாநிதி மறைவுக்குப் பின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
கருணாநிதி போல காலம் தாழ்த்தாமல், தனது மகன் உதயநிதிக்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பை வழங்கி உச்சி முகர்ந்த ஸ்டாலின், ‘கிச்சன் கேபினேட்’ ஆலோசனைப்படி உதயநிதியை பிரசார களத்தில் தற்போது இறக்கி விட்டிருக்கிறார்.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் வாரிசான கதிரவன் களமிறக்கப்படுகிறார்.
அரசியலில் அவர் போதிய ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தந்தையின் உந்துதலால் கட்சிக்குள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறார். இந்தச் சூழலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கடந்த வாரம் கடலூர் மாவட்டத்துக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அவருடன் வடலூரில் தனது வாரிசையும் மேடையேறச் செய்தார் எம்.ஆர்.கே.பி. தலைவரின் வாரிசுக்கு, தனது வாரிசை வாள் கொடுக்கச் செய்து அழகுப் பார்த்தார்.
29 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
07 Mar 2026