2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வாழைப்பழ சாக்லேட்

Mayu   / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதோடு பல உணவுகளையும் பதார்த்தங்களையும் இனிப்புகளையும் வாழைப்பழத்தில் எளிதாக செய்யலாம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. எந்த உணவிலுமே சுவை சற்று அதிகமாகவே இருக்கும். இது மட்டுமா பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க அடிப்படை பொருளே வாழைப்பழம்தான்.

இப்படி வாழைப்பழத்தில் பல சுவை மிகுந்த உணவுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் சூரத் நகரைச் சேர்ந்த தெருவோர கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தனித்துவமான வாழைப்பழ ரெசிபியை விற்பனை செய்து வருகிறார். அப்படியென்ன அவர் வித்தியாசமாக செய்கிறார் தெரியுமா? நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வகையில், வாழைப்பழத்தின் உள்ளே சாக்லேட் மற்றும் ஜாம் சேர்த்துக் கொடுக்கிறார்.

இந்த வித்தியாசமான உணவு குறித்தும், அதை எப்படி செய்கிறார்கள் என்றும் @crazysha01 என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். வாழைப்பழத்தின் ஒரு பக்க முனையை அழகாக வெட்டி, அதன் தோலை பாதியளவு உறித்துவிட்டு வாழைப்பழத்தின் உள்ளே சிறிய இயந்திரத்தின் மூலம் நாம் விரும்பக் கூடிய சாக்லேட் க்ரீமையோ அல்லது ஜாமையோ உட்செலுத்துகிறார்கள்.

இதன் செய்முறை பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறது. பின்னர் எப்போதும்போல் வாழைப்பழத்தின் தோலை உரித்து சாப்பிட வேண்டும். இதன் விலை ரூ.60 மட்டுமே. இந்த வித்தியாசமான உணவை முதன்முதலில் சூரத் நகரில் உள்ள Cafe Six Eleven என்ற தெருவோர கடை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இதன் வீடியோ வெளியானதுமே எதிர்பார்த்ததைப் போல வைரலாகத் தொடங்கியது. பலரும் ஆச்சர்யமும், நகைச்சுவையும் கலந்த கருத்துகளை இந்த வீடியோவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

வாழைப்பழத்தில் வெறும் சாக்லேட் கலந்ததற்காக இவ்வுளவு விலை கொடுக்க வேண்டுமா என்றும் இதன் சுவை எப்படியிருக்கும் என கற்பனை செய்யக்கூட முடியவில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X